தமிழை விட சமஸ்கிருதம் பழமையானதா? – ஆங்கில பாடப்புத்தகத்தில் பிழை..! -வெடித்த சர்ச்சை

478

12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையானது என அச்சிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பாடப்புத்தகத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாடப்புத்தகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

திருநள்ளாரில் செயற்கை கோள் இருந்ததாக ஒரு வகுப்பின் பாடப்புத்தகத்தில் தவறான செய்தி அச்சிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தேசிய கீதத்தில் எழுத்து பிழை என தொடர்ந்து சர்ச்சைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் 142 வது பக்கத்தில் தமிழ் மொழி கி.மு. 300 காலக்கட்டத்தில் வழக்கத்தில் இருந்ததாகவும், ஆனால் சமஸ்கிருதம் கி.மு.2000 காலக்கட்டத்தில் வழக்கத்தில் இருந்ததாகவும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.

 இத்தகைய பிழையை செய்திருப்பது தமிழ் மொழியின் தொன்மையை  அழிப்பதற்கான செயல் என தமிழ் ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.