“இனிமேலும் காக்க வைக்க வேண்டாம்..” சந்தானம் போட்ட டுவீட்..! குஷியான ரசிகர்கள்..!

1035

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் திரைப்படம் டகால்ட்டி. ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படத்தில் நடிகர் சந்தானம், காமெடியனாக நடித்திருந்தார்.

தற்போது, அவரது சிஷ்யன் இயக்க ஹீரோவாக கலக்க இருக்கிறார். யோகி பாபு, ரித்திகா சென் ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று காலை 5 மணிக்கு வெளியாக இருந்தது.

ஆனால், ரசிகர்களை இனிமேலும் காக்க வைக்க வேண்டாம். டகால்ட்டி திரைப்படத்தின் டீசர் இன்று காலை 4.15 மணிக்கே வெளியாகும் என்று சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திரைப்படம் இந்த மாதமே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement