திருமண வரவேற்பு விழாவில் ஏற்பட்ட மோதலில், இளைஞர் அடித்து கொலை

657

சென்னை சாந்தோம் அருகே திருமண வரவேற்பு விழாவில் ஏற்பட்ட மோதலில், இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாந்தோம் தேவாலயத்திற்கு எதிரே உள்ள சமுதாய கூடத்தில் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதால் நொச்சிநகரை சேர்ந்த விஜய் என்பவருக்கும், 10 பேர் கொண்ட கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், 10 பேர் கொண்ட கும்பல், உருட்டு கட்டையால் விஜயை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், சுவர் ஏறி தப்பி செல்ல முயன்ற விஜயை துரத்தி பிடித்து தலையில் பலமாக அடித்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஜய் கொலை செய்யப்பட்ட வழக்கில் நொச்சி நகரை சேர்ந்த உலகநாதன், மணிகண்டன், அசோக், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement