விருப்பமனு வாங்குவதில் தாமதம் – சரத்குமார்

290
sarath10.3.19

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் விருப்ப மனு வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விருப்ப மனு வாங்குவது ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை)சரத்குமார் கூறும்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று வர இயலவில்லை. எனவே, நாளை (ஞாயிறு) முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படும்.

ஏற்கனவே அறிவித்தபடி நாளை விருப்ப மனு வாங்கப்படும் தொகுதிகளுக்கு நாளையே வாங்கப்படும். இன்று (சனிக்கிழமை) வாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (திங்கள்) மனு வாங்கப்படும் என்று அறிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of