15 ரூபாயை ஏமாற்றிய சரவணா ஸ்டோர்..? தட்டிக்கேட்டவரை தாக்க முயன்ற பவுன்சர்கள்..! வைரல் வீடியோ..!

626

தமிழகத்தின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று சரவண ஸ்டோர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், உலகின் சில முக்கிய நாடுகளிலும் தனது கிளைகளை இந்நிறுவனம் வைத்துள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனம் தொடர்பான ஒரு வீடியோ கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில்,

” பாடி சரவண ஸ்டோர்ஸ் கடையில் ஒருவர் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது, பில் போடும் கவுண்டரில், ஒரு பிஸ்கட் பேக்கட்டில் விலை ரூபாய் 80 என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால் பில் போடும் போது, ரூபாய் 95 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்காக இவ்வாறு எக்ஸ்ட்ரா ரேட்ல விக்குறீங்க என்று அந்த நபர் கேட்கிறார். அதற்கு கடை ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள். பிறகு அந்த நபர் வாக்குவாதம் செய்யத்தொடங்குகிறார்.

இதையடுத்து கடையில் பணிபுரியும் பவுன்சர்கள், தனியா ரூம்க்கு வா பேசிக்கலாம் என்று மிரட்டல் தோனியில் பேசுகின்றனர். இதையடுத்து, அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள், இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க பவுன்சர்கள் சென்றுவிடுகின்றனர்.” இதோடு அந்த வீடியோ முடிகிறது.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து மேலும் தகவல்களை அறிய வீடியோவை பார்க்கவும்..,