குடும்பங்கள் பற்றியெல்லாம் கவலையில்லை..! கவினின் பேச்சு..! சீக்ரெட் உடைத்த இயக்குநர்..!

1422

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். படிக்கும் போது கவி ராஜன் என்று அழைப்பட்ட இவர், சினிமாவில் சேர்ந்த பிறகு கவின் என்று மாற்றிக்கொண்டார். சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியை தொடர்ந்து, நட்புனா என்னனு தெரியுமா..? சத்ரியன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், தற்போது பட வாய்ப்பில்லாமல் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பக்கத்து வீட்டு பையன் என்ற நிலையில் இருந்த கவின், தற்போது மிக மோசமான நிலைக்கு பொதுமக்களால் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் குறித்து சரவணன் மீனாட்சி சீரியல் இயக்குநர் பிரவின் பென்னட் ஒரு யுடுயூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் பேசியது பின்வருமாறு:-

“சரவணன் மீனாட்சி சீரியலின் போது இருந்த கவின் வேறு, தற்போது பிக்-பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் கவின் வேறு. சரவணன் மீனாட்சி சீரியலை முடித்ததற்கு காரணமே கவின்தான்.

சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் கிடைத்த புகழை வைத்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கிவிட்டான். அவனே சிரியலில் இருந்து நான் விலகப்போகிறேன் என்று தெரிவித்தான்.

இந்த சீரியலை நம்பி 40- குடும்பங்கள் இருக்கிறது என்று நான் கூறியபோதும், 40 குடும்பங்களைப் பற்றி யோசித்தால் நான் எப்படி வளர முடியும்? நான் எப்படி அடுத்த ஸ்டேஜ்க்கு போவது என கேட்டான்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement