‘புயலை நோக்கி’ என்ற தலைப்பில் கவிதை நடையில் டுவிட்டரில் செய்தி – ராணுவம்

1043

இந்திய வீரர்களை ஊக்குவிக்கவும் ராணுவம் தன்னுடைய அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் ‘புயலை நோக்கி’ என்ற தலைப்பில் கவிதை வடிவில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் புயல் வீசும் நேரத்தில் ஆற்றில் வீசும் கடும் அலையில் படகை நேர்த்தியாக ஓட்டுங்கள். அநீதிக்கு எதிராக, நீதியை நிலைநாட்ட இது நமக்கு தைரியம் அளிக்கும். இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளது. இதற்கு காரணமான நமது துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு நன்றி. நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் தியாகம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்”என கூறப்பட்டு உள்ளது.

இந்த கவிதை நடை செய்தி, இந்திய வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வெற்றி பெற உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of