வலி நிவாரணியான சாரிடான் மாத்திரைக்கு மத்திய அரசு விதித்திருந்த தடை நீக்கம்

843

வலி நிவாரணியான சாரிடான் மாத்திரைக்கு மத்திய அரசு விதித்திருந்த தடையை தளர்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் தடை சாரிடான் உள்ளிட்ட 328 மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மருந்து நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாரிடான், டார்ட், பிரிட்டான் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரை மற்றும் மருந்துகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்யலாம் என்றும் எஞ்சிய மருந்து மற்றும் மாத்திரைகள் மீதான தடை தொடரும் எனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Advertisement