ராகுலுக்கு எதிராக வந்த “பச்சை மிளகாய்!”

407

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சக்திக்கான தகடுகள் அமைத்துக் கொடுப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தப் புகாரில் சரிதா நாயர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோலார் பேனல் மோசடி தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தன்னை சோலார் பேனல் வழக்கில் சிக்க வைத்த காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக சரிதா நாயர் கூறினார். இந்நிலையில், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அவரது வேட்புமனுவுடன் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் ராகுலை எதிர்த்து அவர் சுயேச்சையாகக் களம் காண்கிறார். இந்நிலையில், அவருக்கு பச்சை மிளகாய் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of