சர்க்கார் படத்தின் வசனகர்த்தா! புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை!

1825

சர்கார், 2.ஓ, நான் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். தனது பல்வேறு வசனங்கள் மூலம் திரைப்படங்களில் புரட்சி செய்த இவர், தற்போது மாவை வைத்து ஒரு புரட்சியை செய்துள்ளார். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..,

ஜெயமோகன் பல்வேறு நாவல்களும், பல்வேறு முக்கிய ஹீரோக்களின் படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் உள்ளவர். இந்நிலையில் இவர் அவர் வீட்டின் அருகில் இருந்த மாவு கடைக்கு தோசை மாவு வாங்க சென்றுள்ளார்.

அப்போது அந்த கடையில் இருந்த மாவுக்கடைக்காரரின் மனைவி, பழைய மாவு தான் உள்ளது, புதிய மாவு மாலை தான் வரும் என்று கூறியுள்ளார். சரி பரவாயில்லை என்று கூறிய ஜெயமோகன் மாவு பாக்கெட்டுகளை வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அவர், மாவு பாக்கெட்டை பிரித்துள்ளார்.

பின்னர் அதில் இருந்து புளித்த வாசைன வீசியுள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்த ஜெயமோகன், அந்த கடைக்காரரின் மனைவியிடம் ஆவேசத்துடன் பேசியுள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜெயமோகன் அந்த புளித்த மாவை கடைக்காரரின் மனைவி தூக்கி வீசியுள்ளார்.

இதனை கண்ட மாவுக்கடைக்காரருக்கும், ஜெயமோகனுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாவுக்கடைக்காரர், ஜெயமோகன் மீது அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனும் காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளார். ஏழை சொல் அம்பலத்தில் ஏராது என்ற வாய்மொழிக்கு இனங்க, போலீசார் அந்த மாவுக்கடைக்காரரை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்தக் கடைக்காரரை தாக்கிய ஜெயமோகன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபரிகள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திரைப்படத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளை கொண்டு, தனது எழுத்தின் மூலம் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், புளித்த மாவின் மூலம் தர்ம அடி வாங்கியுள்ளார் என்று நெட்டிசன்கள் பலர் நக்கலடித்து வருகின்றனர்.