சார்கார் படத்தை HD பிரிண்ட்டில் வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ்

4129

சார்கார் படத்தை HD பிரிண்ட்டில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் சர்கார் திரைப்பட தயாரிப்பு குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு நாளை மிக பிரமாண்டமாக சர்கார் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு படத்தின் டிக்கெட்டை வாங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை தமிழ் ராக்கர்ஸ், அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சர்கார் படத்தின் HD பதிப்பை வெளியிடுவோம் என சவால் விட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸின் இந்த ட்விட்டை பார்த்து விஜய் ரசிகர்கள் பலர், வேண்டாம் என கூறி வருகிறார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் தமிழ் ராக்கர்ஸ் சொல்வதை செய்யும் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.