“சர்கார்” படத்திற்கு தடையா?

588
sarkar-movie

விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடைக் கோரிய வழக்கை அவசர வழக்காக நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’சர்கார்’ படம் தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ. கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘செங்கோல்’ என்ற பெயரில் தான் எழுதிய கதையை திருடி, சர்கார் படத்தை தயாரித்து வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து தடைக் கோரிய வழக்கை அவசர வழக்காக நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சம்மேளனத்தில் சர்க்கார் என்ற பெயரில் எடுக்கும் கதையை இதற்கு முன்னதாகவே செங்கோல் என்ற தலைப்பில் பதிவு செய்திருப்பதாகவும், சர்க்கார் படத்தில் கதை என்ற இடத்தில் தன்னுடைய பெயரை  எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் என்று போட வேண்டும் எனவும் நீதிபதி எம் சுந்தர் முன்னிலையில் முறையீட்டுள்ளார், இல்லாவிட்டால் சர்க்கார் படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளார்