விஜய் ரசிகர்கள் என கூறி அரிவாளுடன் மிரட்டல் விடுத்த இளைஞர்கள்

193
Sarkar-issue

சர்கார் பட சர்ச்சையின் போது விஜய் ரசிகர்கள் என கூறி அரிவாளுடன் மிரட்டல் விடுத்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சர்கார் படத்தில் அரசை விமர்சிப்பதாக கூறி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

இதனிடையே, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் எனக் கூறி பயங்கர ஆயுதங்களுடன் தகாத வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வீடியோவில் மிரட்டல் விடுத்த சஞ்சய், அனிஷேக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.