சர்கார் சிங்கில் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

715

விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வரும் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ’சர்கார்’. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ. கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் இன்று காலை 11 மணியளவில் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அறிவித்தனர். அதன்படி படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளதாக பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.