மதுரையில் சர்கார் படம் நிறுத்தம்

603

நடிகர் விஜயின் சமீபகால படங்களில் பெரும்பாலானவை சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தீபாவளி அன்று ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடித்து வெளியான ’சர்கார்’ படமும் சர்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்களை அவதூறு பரப்பும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சர்கார் படம் திரையிடப்பட்ட 2 தியேட்டர்களில் படம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் மட்டுமே மீண்டும் திரையிடுவோம் என தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of