சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்

316

1993ம் ஆண்டு முதல் கிழக்கு ஆசியா நாடுகளில் மிகவும் பிரபலமாக நடந்து வரும் ஒரு பிரமாண்டமான நிகழ்வுதான் ஷாங்காய் பிலிம் பெஸ்டிவல்ஸ் (Shangai Film Festivals), எல்லா வருடமும் ஜூன் மாதம் 15ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வை பொறுத்தவரை, பல நாடுகளில், பல மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கபட்டு இந்த ஷாங்காய் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்படுகிறது. அதுமட்டும் இன்றி சிறந்த நடிகர் நடிகைகள், சிறந்த இயக்குனர், சிறந்து திரைக்கதை என்று பல தரவரிசையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ராஜீவ்மேனனின் “சர்வம் தாளமயம்”அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம், ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பு மிக்க இத்திரைப்படவிழா, கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கி வரும் ஜூன் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of