சசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்

1431

பெங்களூர் பரப்பன அக்ரஹரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா – வரும் 27 ஆம்தேதி விடுதலையாக இருந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

பின்னர், நடைபெற்ற மருத்துவசோதனையில், பெருந்தொற்று வைரஸ் பாதி்ப்பு அவருக்கு உறுதியானது. இதையடுத்து பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

சசிகலாக சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார் என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விக்டோரியா மருத்துவமனையை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement