சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன் – சசிகலா

421

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிய நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உள்நோக்கம் கொண்ட நபர்கள் தனது உடல் நிலை குறித்து, விஷமத்தனமான செய்தியை பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்று உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வதந்தி பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சிறையில் நன்னடத்தை விவகாரத்தில் சட்ட ரீதியாக முடிவு எடுப்பார்கள் என்று நம்புவதாகவும், அபராத தொகையை செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement