ராய் லட்சுமி படத்தில் வில்லியாக சாக்‌ஷி அகர்வால் | Cindrella

263

‘சிண்ட்ரெல்லா’, தமிழில் ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம். திகில் ஹாரர் பேய்ப் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும்போது, “இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும் என்று கூறினார்.

cindrella

இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்’ என்றார் இயக்குனர்.