செயற்கை கோள் வசதிகளால் கஜா புயலில் உயிரிழப்புகளை தவிர்த்து உள்ளது – மயில்சாமி அண்ணாதுரை

433

செயற்கை கோள் வசதிகள் உள்ளிட்டவைகளால் கஜா புயலில் உயிரிழப்புகளை தவிர்த்து உள்ளதாக இந்திய விண்வெளி முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசி அவர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சிறு வயதில் இருந்த போது, ஏற்பட்ட புயல் காரணமாக 800 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த ரயில் கவிழ்ந்து உள்ளதாகவும், அந்த சமயத்தில் எண்ணிக்கையை கணக்கிட முடியாத அளவிற்கு உயிரிழப்புகளை சந்தித்து உள்ளதாகவும் கூறினார்.

மேலும் அந்த காலகட்டத்தில் புயல் வருவது தெரியாமல் இருந்து வந்த சூழலில், தற்போது செயற்கைகோள் படங்களால் கஜா புயலின் தாக்கத்தை அறிந்து அதற்கேற்றவாற்று முன்னெச்சரிக்கையை நடவடிக்கை எடுத்ததால் உயிர் சேதத்தை மிக மிக குறைத்து உள்ளதாக தெரிவித்தார்.