கைது செய்யப்பட்ட 5 போலீசார் மதுரை மத்திய சிறையில்  அடைப்பு

319

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையில் உள்ள தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சாத்தான்குளம் போலீசார், கடுமையாக தாக்கியதில் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவின் பேரில் 5 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டிவ போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 5 பேரும் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி சிறையில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைதிகள் நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.