சாத்தான்குளம் சம்பவம்..! சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..!

333

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று பல்வேறு ஆதரவு குரல்கள் எழுந்த நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கு தற்போது, சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அவர்கள 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 3 நாட்கள் மட்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.