சாத்தான்குளம் வழக்கில் முதல்வரிடம் விசாரணை..?

620

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதாக,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டும் வகையில், வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சாத்தான்குளம் வழக்கு தொடர்பான எந்த ஒரு விசாரணையும் நடக்கும் முன்னரே முதல்வர் விடுத்த அறிக்கையில் தவறான தகவல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜூம் – பென்னிக்சும்  உடல்நலக் கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என முன்னுக்குப் பின் முரணாக, தகவல் தெரிவித்ததாக முதல்வர் பழனிசாமி மீது அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த வழக்கில், பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாக  உயிரிழந்ததாக முதல்வர் கூறியிருப்பதால் அவரை விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of