சாத்தான்குளம் சம்பவம் – போலீஸ் கைதிகளுக்கு ஜாமீன்?

595

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் – ஜெயராஜ் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கொடூர சம்பவத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், ஆகியோருடன் SSI பால்துரை, காவலர்கள் சாமிதுரை தாமஸ் உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, நேற்று கைதுசெய்யப்பட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர் தாமஸ் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் இருப்பதால், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப்பிறகு இன்று கைது செய்யப்பட்டவர்கள் இன்று சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.