“அப்ப அது உண்மை கிடையாதா..” நடிகர் சதீஷ் திருமணம்..! பெண்ணின் அண்ணன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு..!

4584

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ். மெரினா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்தவர்.

இவரது திருமணம் எப்போதும் நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மாலையும், கையுமாக இருக்கும் படி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது.

இவருக்கும், சிக்சர் படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கைக்கும் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் காதல் திருமணம் என்றும் சினிமா வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டது.

இந்நிலையில் சிக்சர் படத்தின் இயக்குநர் சாச்சி, அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், சதீஷ் மற்றும் அவரது தங்கையின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு, இது ஒரு முழுமையான பெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது நாள் வரையில், சதீஷ்-க்கு நடக்க இருக்கும் திருமணம் காதல் திருமணம் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், மணப்பெண்ணின் அண்ணன் சாச்சி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of