சத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..!

1171

சத்தியம் foundation மற்றும் சத்தியம் தொலைக்காட்சி இணைந்து, பூமியை காக்கும் திருவிழா 5 லட்ச மரங்கள் இலக்கு என்கிற உன்னத நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது.

அதன் 4-ம் கட்டமாக திருவாரூர் மாவட்டம், வடவேற்குடி என்கிற கிராமத்தில், 12.01.2020 அன்று அந்த கிராம மக்கள் அனைவரும் இணைத்து வனம் தன்னார்வ அமைப்பு, மனக்கரை கிராம ஒன்றியம் ஒருங்கிணைத்து பசுமை பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான, பறை இசை, சிலம்பம், கரகாட்டம், நாட்டுபுற பாடல்கள் என கோலாகலமாக நடைபெற்றது.

அதன் பிறகு பறவைகளுக்கான இரு குறுங்காடு அமைக்க 30000 சதுரடியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அதில் வேம்பு, இலுப்பை, அத்தி, சீத்த, என்று பறவைகளுக்கு நன்மை தரும் வகையில் மரங்கள் நட பெற்றது, இந்து நிகழ்வில் அந்த கிராமத்தில் உள்ள சிறியவர்கள் முதல் முதியோர் வரை குடும்பமாக கலந்து கொண்டனர்.

மேலும் சத்தியம் தொலைக்காட்சி இதனை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்று நடுதலில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of