சத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..!

152

சத்யம் ஃபவுண்டேஷன் முதல்கட்டமாக கடந்த 7, 8 தேதிகளில் சென்னையில் 5 லட்சம் மரக்கன்றுகளை நடும் முதல்கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து சத்யம் ஃபவுண்டேஷன், சத்தியம் தொலைக்காட்சி, பசுமை நாமக்கல் மற்றும் குறிஞ்சி கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பூமியைக் காக்கும் திருவிழா 2 ஆம் கட்டமாக நாமக்கல் லத்துவாடி கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார். பசுமை நாமக்கல் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

குறிஞ்சி கல்வி நிறுவனங்களில் தலைவர் தேவியண்ணன் தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்புரையாற்றினர்.

 

 

இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் பல்வேறு வகையான மரங்கள் 25க்கும் மேற்பட்ட மா, பலா, சாத்துக்குடி, சீதாப்பழம், வேம்பு, ஆரஞ்சு ஆகிய பல்வேறு காய்கனிகளை தரக்கூடிய மரங்களை நட்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

இதில் மரக்கன்றுகள் அதனால் ஏற்படும் நன்மை எதிர்கால சந்ததியினருக்கு சந்தோஷமாக இருக்க கூடிய வகையில் இப்போதே இந்த மரத்தை நட்டால் எதிர்காலத்தில் பயன் அடைவார்கள் என்ற இலக்குடன் 2000 மரக்கன்றுகள் இந்த நிகழ்ச்சியில் நடப்பட்டது.

ஒவ்வொரு மரக்கன்றுகள் நடும் இடத்தில் மாணவிகள் பெயர்பலகை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது