சத்தியம் செய்தி எதிரொலி : நெல் கொள்முதல் நிலையங்களில், முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் பணியிடை நீக்கம்

224

சத்தியம் செய்திகள் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 47 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.  நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 284 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 40 கிலோ கொண்ட சிப்பங்களாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

40 கிலோ மூட்டை 767 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.  இவற்றில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து சத்தியம் தொலைக்காட்சி “கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்” என செய்தி தொகுப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள்  12 குழுக்களாக  பல்வேறு இடங்களில்  கடந்த சில தினங்களாக சோதனை மேற்கொண்டனர்.

விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் பணமாகவும் ஒரு கிலோ வரை மூட்டைக்கு எடை அதிகமாகவும் கொள்முதல் செய்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் நேரடி கண்காணிப்பாளர், பட்டியல் எழுத்தர் உட்பட சுமை தூக்கும் தொழிலாளர்கள் 47 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 16 பேர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளதுடன் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of