சத்தியம் செய்தி எதிரரொலி – நகராட்சி ஆணையர் அதிரடியாக பணியிடமாற்றம்

232

சத்தியம் செய்தி எதிரரொலியாக ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்திற்குள் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும்,

அதனை தடுக்க பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் காத்திருப்பு அறையை, தனி நபருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் சுப்பையா தெரிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதுகுறித்த செய்த சத்தியம் தொலைக்காட்சியில் கடந்த 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சுப்பையா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ராமநாதபுரம் நகராட்சியின் புதிய ஆணையராக விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of