மாலை பகழி செய்திகள்..!

280

1. 10 பொதுத்துறை வங்கிகள் இணைத்து 4 பெரும் வங்கிகளாக மாற்றி அமைப்பு….

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….

 

2. இந்தியன் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி உள்ளிட்ட 10 வங்கிகள் இணைப்பு…..

வங்கிகள் குறைப்பால் ஊழியர்கள் பணிக்கு பாதிப்பில்லை…..
நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….

 

3. அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளுக்கான வாராக்கடன் அளவு குறைவு….

8 புள்ளி 65 லட்சம் கோடியில் இருந்து 7 புள்ளி 9 லட்சம் கோடியாக குறைந்துள்ளது…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்….

 

4. சென்னையில் வானத்தை மறைக்கும் வகையில் ஒன்று கூடிய கரு மேகங்கள்….

இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது….

 

5. தொடரும் சிதம்பர ரகசியம்…..

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் திங்கட்கிழமை வரை நீட்டிப்பு….

 

6. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து செப்டம்பர் 3ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்…

தொல். திருமாவளவன் அறிவிப்பு….

 

7. லண்டனில் தொழில்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடல்…..

தமிழகத்தில் வீட்டுவசதித்திட்டங்களில் முதலீடு செய்யுமாறு தொழில்துறையினருக்கு அழைப்பு….

 

8. டிடிவி முன்னாள் ஆதரவாளர்களுக்கு திமுக-வில் புதிய பதவிகள்…

திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்….

வி.பி.கலைராஜன் இலக்கிய அணி இணை செயலாளராக நியமனம்….

 

9. அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் திமுக இயங்குகிறது….

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்….

 

10. வருமான வரி தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்….

கால நீட்டிப்பு என பரவும் தகவல் வதந்தி….

வருமான வரித்துறை விளக்கம்….

 

11. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை….

நீதிபதி கருணாநிதி அதிரடி தீர்ப்பு….

 

12. காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு,,,

ராக்கெட் வெடிகுண்டு பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டது…

 

13. உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்….

10 மீட்டர் ஏர் பிஸ்டல் ரைப்பில் பிரிவில் அபிஷேக் வர்மா தங்கம் பதக்கம் வென்று அசத்தல்…

பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்…

 

14. உணர்ச்சி வேகத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டேன்….
மீண்டும் இந்திய அணியில் விளையாட அம்பத்தி ராயுடு விருப்பம்…

 

(குறிப்பு :- பகழி என்றால் அம்பு என்று பொருள். அம்பு போன்ற கூர்மையான செய்திகளை வழங்குவதே இந்த தொகுப்பின் நோக்கம்.)

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of