ஒத்திகை இல்லாமல் மோடியால் பேட்டியளிக்க முடியாது! சத்ருகன் கடும் தாக்கு!

579

காங்கிரசில் இருக்கும் சத்ருகன் சின்ஹா மோடியின் சமீபத்திய பேட்டி குறித்து பேசியபோது,

பிரதமராவதற்கு தனிப்பட்ட குணநலன் எதுவும் தேவை இல்லை. வெறும் எண் விளையாட்டு அது. போதிய எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் யார் வேண்டும் என்றாலும் பிரதமர் ஆகிவிட முடியும்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துவிட்டால் பிரதமர் ஆவது என்பது இன்னும் எளிதான காரியமாக அமைந்து விடுகிறது.

அப்படி பார்க்கும்போது நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அவர்களுக்கும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்ததை தாண்டி மோடிக்கு வேறு என்ன சிறப்பு தகுதி வந்து விட்டது. தன்னைப் போன்றவர்களே மோடியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததாக கூறியுள்ளார் சத்ருகன் சின்ஹா.

மோடியால் எந்த ஒரு பேட்டியையும் ஒத்திகை இல்லாமல் கொடுக்க இயலாது, எழுதி வைக்காமல் எந்த ஒரு பதிலையும் அவரால் கூற முடியாது.
எந்த வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் நரேந்திர மோடியை பேட்டி காண வேண்டும் என்பது தனக்கு ஆசை என்று கூறியுள்ள சத்ருகன் சின்ஹா பிரதமரை பேட்டி எடுத்த அக்சய், மோடியின் கொள்கைகளை முன்னிலைப் படுத்தி வருகிறார். அதில் அவருக்கு ஆதாயமும் உள்ளது என்று சத்ருகன் சின்ஹா மோடியை வெளுத்து வாங்கியுள்ளார்.

மேலும் தனது மனைவி வேறு கட்சியில் உள்ளது குறித்து பேசிய அவர் இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் இருவருக்கும் ஒன் மேன் ஆர்மி மற்றும் டூ மேன் ஆர்மியை வீழ்த்துவதே இலக்கு என்று மோடி மற்றும் அமிட்ஷா குறித்து குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of