“பெண்ணியம்.., ஓரினச்சேர்க்கை..,” – சவுதி அரேபியா வெளியிட்ட அதிரடி வீடியோ..! இப்படி ஒரு முடிவா..?

678

கடுமையான சட்டங்கள் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வரும் நாடு சவுதி அரேபியா தான்.

இந்த நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் சரிசமமாக இல்லை என்று பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், புதியதாக பதவியேற்ற இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ், கல்வி சார்ந்த விஷயங்களில் சுதந்திரம் போன்ற பல்வேறு அதிரடி முடிவுகளை அவர் எடுத்திருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் அளித்து வந்தனர்.

இந்நிலையில், சவுதி அரேபியா அரசு சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பெண்ணியம், நாத்தீகம், ஓரினச்சேர்க்கை போன்ற கருத்துகள் பேசுபவர்கள் தீவிரவாதிகள் என்றும், இந்த கருத்துக்களை சகித்துக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அளவுக்கதிகமாக வலியுறுத்தப்படும் எந்தக் கருத்துக்களும் தீவிரவாதக் கருத்துக்களே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கொஞ்சம், கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அந்நாட்டு மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அரசின் இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்ட அந்த சட்டமும், தற்போது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.