பாகிஸ்தானுடனான நட்பில் முறிவு..! சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு..!

576

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவி மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு 6.2 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என்று, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த 2018ஆம் ஆண்டு அறிவித்தார். இதில் 3 பில்லியன் டாலர் கடனுதவியாகவும், 3.2 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் கடனாகவும் வழங்க சவுதி ஒப்புதல் அளித்தது.

இந்த சலுகை மூலம் பாகிஸ்தான் இதுவரை, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனுதவியதாக பெற்றுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் காரணமாக சவுதி அரேபியா – பாகிஸ்தன் இடையே சிக்கல் எழுந்துள்ளது.

சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பை, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவி மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனையும் உடனடியாக திரும்பி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement