சத்தியம் டிவி -யின் 4-வது கட்ட நிவாரணப்பணி நாளை மறுநாள் தொடங்குகிறது

240

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நான்காவது கட்ட நிவாரப்பணிகளை, சத்தியம் தொலைக்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. எனவே, நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர் நாளை நள்ளிரவு வரை, சத்தியம் டிவி அலுவலகத்தில் வழங்கலாம் என தெரிவித்துக்கொள்கிறோம்.

கஜா புயலால் உருக்குலைந்து போன மக்களுக்கு உதவும் வகையில், புயல் தாக்கிய 3-வது நாளில் இருந்து, சத்தியம் தொலைக்காட்சி, தமது நிவாரணப்பணிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதுவரை மூன்று கட்டங்களாக, கிட்டத்தட்ட 40 டன் நிவாரணப் பொருட்களை, 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வழங்கியுள்ளது சத்தியம் டிவி.

அரசு அதிகாரிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செல்ல முடியாத பகுதிகளுக்கெல்லாம் சென்று, தமது முதற்கட்ட நிவாரணப்பணியை நிறைவேற்றியது.

அதேபோல், 2-வது கட்டம், 3-வது கட்டம் என தொடர்ந்து, நேயர்கள் மற்றும் பல தன்னார்வ அமைப்புகள் ஆகியோரின் உதவியுடன் நிவாரணப்பணிகளை செவ்வனே செய்து முடித்துள்ளது சத்தியம் டிவி.

இந்த சூழலில், 4-வது கட்ட நிவாரணப் பணிகள் நாளை மறுநாள் மீண்டும் தொடங்குகிறது சத்தியம் டிவி. அந்தப் பணிக்காக, நிவாரணப் பொருட்களையோ, நிதி உதவியையோ வழங்க விரும்புவோர், நாளை நள்ளிரவு வரை சத்தியம் டிவி அலுவலகத்தில் நேரடியாக வழங்கலாம்.

அவற்றை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களுடன் இணைந்து வழங்குவதில் சத்தியம் டிவி பெருமிதம் கொள்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக எங்களுடன் இணைந்து வழங்க விரும்புவோரும், எந்தெந்த இடங்களில் நிவாரணங்களை வழங்குகிறோம் என்பதை அவ்வப்போது சத்தியம் டிவியில் அறிவிப்போம் என்பதால், தொடர்ந்து சத்தியம் டிவி பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.