பிளாஸ்டிக் தடை..! அதிரடி உத்தரவிட்ட ரயில்வே அமைச்சகம்

154

நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வரும் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும், பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், நாடு முழுவதும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது எனவும், மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of