இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யாரென தெரியுமா?

544

1947 க்கும் முன்பு இந்தியாவில் தொழில்களை முன்னிறுத்தி பல சாதிகள் பரவி இருந்த நிலையில், உயர் சாதியாகவே இருந்தாலும் அவர் வீட்டு பெண்களை அடக்கி ஆண்ட சமூகம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆதிக்க சாதியை எதிர்த்து அவர்களின் வர்ண முறைகளை எதிர்த்து இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக பணியாற்றியவர் சாவித்ரி பாய் பூலே.

savitribai phuleஇவர் குஜராத் மாநிலத்தில் 1831 ம் ஆண்டில் அகமதாபாத் பகுதியில் நைக்கோன் என்ற இடத்தில் பிறந்தார்.  இவரின் 8 வயது காலத்திலே 12 வயது ஜோதி ராவ் பூலே என்பவரை திருமணம் செய்து வைத்தனர். ஜோதி ராவ் பூலே என்பவர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. தாழ்த்தப்பட்டவருக்கு முதன் முதலில் பள்ளி நிறுவியவர். இவர் ’மகாத்மா’ என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொது நீர் விநியோகம் அளிக்கப்படாத போது, தன் வீட்டிலே கிணறு வெட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீர் எடுத்துக்கொள்ள வழி செய்தனர். சமூகத்தில் பெண்களை அடக்கி வைத்திருப்பதற்கு மாற்றாக இவர் தன் மனைவியை கல்வி கற்க நிர்பந்தித்தார். பின் ஆசிரியர் பயிற்சி பெற அனுப்பி வைத்தார்.

அவர் பயிற்சி பெற்றுத் திரும்பியவுடன் பூனேவில் நாராயண்பேத் என்ற இடத்தில் பிதேவாடா என்ற பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் அந்தப் பள்ளியில் 9 சிறுமிகள் சேர்ந்தார்கள். இவர்கள் தொடர்ந்து 5 பள்ளிகளைத் தொடங்கினர். திட்டமிட்டபடியே 1852-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட தலித் சிறுமிகளுக்கான பள்ளியையும் தொடங்கினார்கள்.கல்வியை சமத்துவ கருவியாக அன்றே இருவரும் கையில் எடுத்தனர். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஆசிரியர் பணியாற்ற எவரும் முன்வரவில்லை.

எனவே சாவித்ரி பாய் பூலே தன் கனவருடன் பள்ளிக்கு சென்று மற்றவருக்கு சொல்லிக்கொடுத்தனர். இருவரையும் எதிர்த்து மக்கள் கற்களை எறிந்தும், மலம் எறிந்தும் தாக்கினர். மனைவியை வெளியே அழைத்து வந்ததற்கு ஜோதி ராவ் பூலே தாக்கப்பட்டார். இருவரும் சமூகத்தில் முற்போக்குடனும், சீர்த்திருத்த முறையில் பல போராட்ட நிகழ்வுகளையும் நிகழ்த்தினர்.

சாவித்ரி பாய், ஆசிரியர் பணியை மட்டுமல்லாமல் 1852ல் மனித உரிமை பற்றி வலியிறுத்த  மகிளா சேவா மண்டல் அமைப்பை பெண்களுக்காக துவங்கினார். கனவர் ஒருபுறம் பொது பணியாற்ற அவருக்கு நிகராக சாவித்ரி பாய் பூலேவும் பணியாற்றி வந்தார்.

அந்த காலத்தில் கணவனை இழந்த மனைவிக்கு மொட்டை அடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருந்தது. அதனை எதிர்த்து முடி திறுத்துபவர்களை ஒன்று திரட்டி சமூகம் வழியாக எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

1876ல் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பலர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். மக்கள் பசியில் தங்கள் சிறுநீரை தாமே அறுந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். (1877 ல் சாவித்ரி பாய் பூனேவிலிருந்து தன் கனவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) அன்றும் இருவரும் இணைந்து மக்களுக்கு உணவு வழங்கினார்.  நோயாளிகளுக்கு சிகிச்சை உதவி செய்த சாவித்ரி பாய் பூலே தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 ல் இறந்தார்.

சாவித்திரிபாய் புலே ஒரு ஆசிரியர் என்பதை தாண்டி ஒரு நல்ல கவிஞரும் கூட.  இவரின் கவிதை தொகுப்பு 1892 ம் ஆண்டு கவிதை மலர் என்ற தலைப்பில் வெளியானது. சாதி எதிர்ப்பு, சீர்த்திருத்ததினை மையமாக கொண்டு உள்ளது.

’’அறிவினைத் திரட்டிக்கொள்

ஒடுக்கப்பட்டவர் துன்பம் நீக்கு

ஆழ்மணல் தங்கத்துகள் போல்தான் கற்றலும்

கற்றுக்கொள்’’ 

இவரின் நினைவாக மாகாராஷ்டிர அரசு இவர் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது. மற்றும் இந்திய அஞ்சல் துறை சாவித்திரிபாய் புலே அஞ்சல் தலையை வெளியிட்டது.

இந்தியாவின் தற்போதைய ஆசிரியர் செப்டம்பர் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சாவித்ரி பாய் பூலே அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக வழங்க பல இடங்களில் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இன்றே இவரது பிறந்தநாள்..