SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி..! வங்கியின் அசத்தல் அறிவிப்பு..!

726

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியின் ஏ.டி.எம்களில் இருந்து, பணம் எடுப்பதற்கான புதிய நடைமுறை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால், பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. நம்பரை எ.டி.எம்களில் பதிவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நாளை மறுநாள் முதல் அமலுக்கு வர இருக்கிறது.

மற்ற வங்கியின் வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ வங்கியில் பணம் எடுக்கும்போது, இந்த நடைமுறை பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கி தொடர்பான குற்றங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement