“1-ஆம் தேதியிலிருந்து..” ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி..! வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

1448

ஏ.டி.எம் எந்திரங்களில், ஸ்கிம்மர் என்ற கருவியை பொருத்தி, முறைகேடாக வாடிக்கையாளர்களின் கடவு எண்ணை அறிந்து கொண்டு பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதனை தடுப்பதற்கு வங்கிகள் பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ரகசிய எண் திட்டத்தை தாங்கள் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இந்த ரகசிய எண் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் இம்முறை செயல்பாட்டுக்கு வருகிறது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள், இதர வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.