எஸ்.பி.ஐ., ஏடிஎம்-ல் நாள் ஒன்றுக்கு ரூ. 20,000 மட்டுமே எடுக்கும் முறை – இன்று முதல் அமல்

351

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஒருநாளில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு ரூ. 40,000 – ஆக இருந்தது. இந்த உச்சவரம்பை ரூ.40,000-ல் இருந்து ரூ.20,000 ஆக குறைக்கப்போவதாக, இம்மாத தொடக்கத்தில் எஸ்.பி.ஐ அறிவித்திருந்தது.

அதன்படி கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான இந்தக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து எஸ்.பி.ஐ கூறியுள்ளதாவது, “மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.