தாமதமாக விடுதலை செய்யப்பட்ட பிரியங்கா.., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

788

சில நாட்களுக்கு முன்பு பாஜக பிரமுகரா பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா முகத்தை மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இவரின் மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இவரை நிபந்தனை ஜாமீனில் வெளியிட்டது. ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர். ஆனால், பிரியங்கா சர்மா நேற்று விடுதலை செய்யப்படவில்லை. ஒரு நாள் தாமதமாக, காலை 9.40 மணிக்குத்தான் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

பிரியங்கா சர்மாவின் வழக்கறிஞர் நீரஜ் கி‌ஷன் கவுல் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். பிரியங்கா சர்மாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மேற்கு வங்காள அரசு பின்பற்றவில்லை என குறிப்பிட்டார்.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு மேற்கு வங்காள மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. “ஏன் உடனடியாக விடுவிக்கப்படவில்லை?” என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு, கோர்ட்டு உத்தரவு தொடர்பான நகல் மாலை 5 மணிக்குதான் கிடைத்தது என மேற்கு வங்க அரசு தெரிவித்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of