கழிப்பிடம் கட்ட மத்திய அரசு வழங்கிய மானியம் – வாரித் தின்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள்

1623

மத்திய அரசின் சுத்தமான இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுக்க கழிப்பறை வசதி இல்லாத ஏழைகளுக்கு, கழிப்பிடம் கட்ட 8 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. அந்த வகையில் IHHL திட்டத்தின் கீழ் தமிழகமெங்கும் ஏழை மக்களுக்கு கழிப்பிடம் கட்டித்தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Modi-IHHL

ஆனால் ஏழை மக்களுக்கு கழிப்பிடம் கட்ட மத்திய அரசு வழங்கிய மானியத்தை மக்களுக்கே கொடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கையாடல் செய்துள்ள சம்பவம் ஆதாரத்தோடு வெளிவந்துள்ளது.

Chennai-corporation

Right-to-Information

சென்னை மாநகராட்சியின் 10-வது மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு கோட்டங்களில் 160 பயனாளிகளுக்கு IHHL திட்டத்தின் கீழ் கழிப்பிடம் கட்டித்தரப்பட்டுள்ளது.10-வது மண்டலத்திற்குட்பட்ட, மேற்கு மாம்பலம், சாலிகிராமம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, எம்.ஜி.ர் நகர் போன்ற பகுதிகளைச்சேர்ந்த 160 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பயனாளிக்கு தலா 8 ஆயிரம் வீதம், 12 லட்சத்து 80 ஆயிரம் ருபாய் செலவிடப்பட்டுள்ளது.

poor-peoples

ஆனால், அதில் 40 பயனாளிகளுக்கு கூட முழுமையாக, மத்திய அரசின் மானியமான 8000 ருபாய் சென்று சேரவில்லை. கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான பயனாளிகளின் பணத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கையாடல் செய்துள்ளனர்.

chennai-peoples

கடன் வாங்கி கழிப்பறை கட்டிய தங்களுக்கு மானியத்தொகை கொடுக்காமல் ஏமாற்றிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிள்ளை குட்டிகளோடு நன்றாக இருக்கட்டுமென ஏழை மக்கள் வருத்தத்தோடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது ஒரு சிறு உதாரணம் மாத்திரமே…

சென்னை முழுக்க கட்டப்பட்ட கழிப்பறை குறித்து ஆய்வு நடத்தினால் தான் பயனாளிகளின் பணம் எவ்வளவு கையாடல் செய்யப்பட்டுள்ளதென முழுமையாக தெரியவரும் என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்…

கமிஷனர் செய்வாரா….?

அவர் வேற ரொம்ப பிசி ஆச்சே…!!