நெல் கொள்முதலில் முறைகேடு..! 2 பேர் பணி நீக்கம்..!

262

திருவாரூரில் நெல் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, கொள்முதல் நிலைய ஊழியர்கள் 2 பேரை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கர்ணாவூர் பகுதியிலுள்ள கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர் தினகரன் மற்றும் பருத்திக்கோட்டை கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் அறிவழகன் இருவரும் நெல் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து நுகர்பொருள் வாணிப கழகத்தின் பொது மேலாளர் தலைமையிலான சிறப்பு ஆய்வுக்குழு விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தினகரன், அறிவழகன்  இருவரையும் பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தவிட்டார்.  நெல் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஐந்து பட்டியல் எழுத்தர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of