சமூக வலைதளங்களில் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க கூடாது! பள்ளிக்கல்வித்துறை!

432

மக்களவை பொதுத்தேர்தல் கால அட்டவணை கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. வரும் தேர்தலில் அரசியல்கட்சியினருக்கு முகநூல், வாட்ஸ்-ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் முக்கிய பிரசார ஊடகங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் சார்பு கருத்துகளை பதிவிடுவதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கல்வித்துறைக்கு உள்பட்ட அனைத்து கல்வி அலுவலகங்கள், பள்ளிகள், தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்படுகின்றனர்.

அரசுப் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

சுற்றுச் சுவர்களில் உள்ள அரசியல் தலைவர்களின் உருவங்கள், அரசு நலத்திட்ட விளம்பரங்களை அழிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சமூக ஊடகங்களில் அரசியல் சார்பு கருத்துகளை பதிவிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.”

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of