அறுந்த சாகசக் கயிறு… 11வயது மாணவிக்கு நேர்ந்த கதி!

310

சத்தீஸ்கர் ராய்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பள்ளி ஒன்றில் பயிலும் கர்திஷா என்கிற 4-ஆம் வகுப்பு மாணவியை கயிறை கட்டிக்கொண்டு இறங்கும் சாகசப் போட்டியில் கலந்துகொள்ள பள்ளி நிர்வாகம் தயார் செய்துள்ளது.

ஆனால் அம்மாணவி அதற்காக பயத்தில் மறுத்ததாகத் தெரிகிறது. எனினும் மானவிக்கு தைரியம் கூறி அப்பள்ளி நிர்வாகம் அவரை இந்த போட்டியில் பங்கேற்க வைத்துள்ளது.

அப்போது மெதுமெதுவாக கயிற்றின் மூலம் இறங்கிக் கொண்டிருந்த மாணவி, திடீரென கயிறு அறுந்து 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதைப் பார்த்த மாணவியின் தாயார் பதறி அடித்துக்கொண்டு ஓடி சிறுமியை தூக்கியுள்ளார். ஆனால் சிறுமி மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.