பள்ளியில் மயக்கம் அடைந்த மாணவி..! பரிசோதனை செய்த மருத்துவர்கள்..! காத்திருந்த அதிர்ச்சி..! கைதான 5 பேர்..!

1536

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில், துப்புரவு பணி செய்யும் தம்பதிகள் தங்கி வந்தனர். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். புதுச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் இவர், திடீரென வகுப்பறையில் மயக்கமடைந்ததுள்ளார்.

இதனைக்கண்ட சக மாணவிகள், ஆசிரியருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அரசு மருத்துவமனைக்கு மாணவி அழைத்து செல்லப்பட்டாள். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மாணவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு, கோடை விடுமுறைக்கு பெற்றோர் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்த போது 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றும், இதனால் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் பள்ளி மாணவி தெரிவித்தார்.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி, 5 நபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புஐடய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of