பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கல்வித்துறை

336

பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் பேருந்து சேவை தொடங்கின.

பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கருத்துகள் பரவலாக எழுந்தன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று தெரிகிறது. அதன் பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of