11 வயது சிறுமி.. ஒரு மாதமாக சீரழித்த பள்ளி முதல்வர்.. அதிரடி தண்டனை..

466

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அரசுப்பள்ளியில், 11 வயது சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். அந்த பள்ளியின் தலைமையாசிரியர் அரவிந்த் குமார், சிறுமியை கடத்தி சென்று, ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், தலைமை ஆசிரியருக்கு, மரண தண்டனை விதித்தும், 1 லட்ச ரூபாய் அபாரதம் விதித்தும் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கினர்.

மேலும், இந்த சம்பவத்தில், அரவிந்த் குமாருக்கு உதவியாக இருந்த பள்ளி ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், 50 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Advertisement