பள்ளிகள் திறக்கும் தேதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு..!

8670

பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில விஷயங்கள் தவிர, மற்ற அனைத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதம் 30 தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கிற்கான தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வரையுள்ள பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நவம்பர் 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10-ஆம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன், சினிமா தியேட்டர்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement