பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த தமிழக அரசு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

7879

வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கு மேலாகா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதன்காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள், விருப்பத்தின் பேரில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், 50 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளனர்.