சென்னையில் கனமழை..! பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

571

கொஞ்சம் மழை பெய்தாலே, பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை செய்தி தொலைக்காட்சிகளை பார்ப்பார்கள். காரணம் என்னவென்று பார்த்தால், விடுமுறை அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் தான்.

இவ்வாறு இருக்க, நேற்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பார்களா என்று மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று வழக்கம்போல் பள்ளிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.